துப்பாக்கி! தீபாவளிக்கு வெடிக்கிறார் விஜய்!:

Tuesday, 9th of October 2012
சென்னை::’துப்பாக்கி’ என்ற பெயரை கேட்டதும் ’விஜய் நடிக்கும் அந்த படத்தின் தலைப்பு பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதா?’ என்ற கேள்வி தான் திரையுலக ரசிகர்களிடையே இருந்து வந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தின் தலைப்பு பிரச்சனை நீண்ட நாட்களாக நீதிமன்றத்திலேயே இருந்தது.  
ஒரு முடிவு தெரிந்தால் மாற்றிவிடலாம் என துப்பாக்கி படக்குழுவும், முடிவு தெரியாமல் விடமாட்டோம் என கள்ளத்துப்பாக்கி படக்குழுவும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு நியாயத்தை முன்னிருத்தி வாதாடி வந்தனர். நீதிமன்றமும் வழக்கை தள்ளிவைத்துக் கொண்டே வந்ததால் நாங்கள் வெளியில் பேசித் தீர்த்துக்கொள்கிறோம் என வழக்கை வாபஸ் செய்துவிட்டு வெளியே வந்து பேசினர். 

பேச்சுவார்த்தையின் முடிவில் துப்பாக்கி என்ற தலைப்புடன் ஏ.ஆர்.முருகதாஸ் படம் தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கிறது. நீதிமன்ற வழக்கின் தாமதத்தால் தாமதமான பட வேலைகள் அனைத்தையும் முழுவீச்சில் முடுக்கிவிட்டிருக்கிறாராம் முருகதாஸ். துப்பாக்கி படத்தின் ரிலீஸுக்கான வேலைகளை இன்றே துவங்கிய படக்குழு செய்தித்தாள் விளம்பரத்தில் ஹீரோயின் காஜல்அகர்வாலை விஜய் தூக்கி வைத்திருப்பது போன்ற போஸ்டர் இடம்பெற்றுள்ளது. 

விஜய் இராணுவ வீரனின் உடையணிந்தும், விஜய்யின் தொப்பியை காஜல் அகர்வால் அணிந்துகொண்டும் ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே துப்பாக்கி படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் இசை வெளியீடு என அந்த போஸ்டரில் அறிவித்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்து இசைக்காக காத்திருக்கிறார்கள்.

துப்பாக்கி படத்தின் பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆர்வமாய் இருப்பதற்கு முக்கியமான மற்றுமொரு காரணம் ‘கூகிள் கூகிள்’ என்ற பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். அந்த பாடலை எழுதியவர் மதன்கார்க்கி. நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜய் படத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் இயக்குனர் தீவிரமாக இருக்கிறார்.

இன்னைக்கு தான் ஒரு போஸ்டர் ரிலீஸாயிருக்கு. அதுக்குள்ள கெளம்பிட்டாய்ங்கய்யா.....

Comments