தெலுங்கில் ரிலீசான 'மாற்றான்' படத்தில் 30 நிமிட காட்சி நீக்கம்!!!

Friday,19th of October 2012
சென்னை::சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்த ‘மாற்றான்’ படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் தெலுங்கில் ‘பிரதர்ஸ்’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் சூர்யா ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். கே.வி. ஆனந்த் இயக்கியுள்ளார்.

‘மாற்றான்’ படத்தில் இடைவேளைக்கு பிறகு காட்சிகள் நீளமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து தெலுங்கில் ரிலீசான இப்படத்தில் 30 நிமிட காட்சிகள் வெட்டி நீக்கப்பட்டு உள்ளன. தற்போது படம் விறுவிறுப்பாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இதனால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாக தெலுங்கு விநியோகஸ்தர் கூறினார். 1 1

Comments