Wednesday,5th,of,September 2012சென்னை::ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தின் தலைப்பின் மீதான பிரச்சனை இன்னும் முடியவில்லை. நீதிமன்றம் இப்படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடித்துகொண்டே போகிறது.
இதனால் படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் படத்தின் டீசர் வெளியிடுவது போன்றவை நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் 'துப்பாக்கி' படத்தை தீபாவளி பண்டிகையான நவம்பர் 13ஆம் தேதி வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது.
'துப்பாக்கி' தலைப்பின் மீதான வழக்கு விசாரணை விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என நம்பும், இப்படத்தின் தயாரிப்பு தரப்பு படத்தை வரும் நவம்பர் மாதம் 13ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளிடப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியிறுக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் முதல் முறையாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
Comments
Post a Comment