Monday,17th of September 2012சென்னை::சோனம் கபூருடன் இந்தி படத்தில் நடித்து வரும் அனுபவம் பற்றி கூறினார் தனுஷ். டுவிட்டர் இணையதள பக்கத்தில் ரசிகர்களை தொடர்பு கொள்ளும் தனுஷ், '3' படத்துக்கு பிறகு கருத்து எதுவும் தெரிவிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் இணையதளம் மூலம் தொடர்பு கொள்ள தொடங்கி இருக்கிறார். ‘பரத்பாலா இயக்கும் ‘மரியான்', இந்தியில் ஆனந்த் இயக்கும் ‘ராஞ்சா' ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். 'மரியான்' இறுதிகட்ட ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் சூப்பர் இசையில் பாடல்கள் பதிவாகி உள்ளன.
அதை திரும்ப திரும்ப கேட்கிறேன். விரைவில் ஆடியோ வெளியாகிறது. அவரது இசையில் நடிப்பது இதுதான் முதல் முறை. தற்போது காசியில் 'ராஞ்சா' பட ஷூட்டிங்கில் இருக்கிறேன். சோனம் கபூருடன் நடித்து வருகிறேன். 15 சதவீத ஷூட்டிங் முடிந்திருக்கிறது. இதுவொரு புது அனுபவம். அன்பாக பழகும் இயக்குனர் ஆனந்தின் திறமைவாய்ந்த குழுவினருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. காசியின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசித்து நடிக்கிறேன்.
Comments
Post a Comment