Saturday,1st of September 2012சென்னை::ஒன்று, இரண்டுப் படங்களில் தடித்துவிட்டாலே போதும், கடை திறப்பு முதல் கல்லுரி விழா வரை அனைத்திலும் துட்டைப் பார்க்கும் நடிகைகளில், நடிகை இனியா பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதற்கு கூட பீஸ் கேற்க ஆரம்பித்து விட்டாராம்.
சமீபத்தில் நடிகை இனியாவை தொடர்பு கொண்ட நிருபர் ஒருவர், "சென்னையில் இருக்கீர்களா? இருந்த ஒரு பேட்டி வேணும்." என்று கேட்டக, அதற்கு இனியா, "அப்படியா, பேட்டிக்கு எவ்வளவு பணம் தருவீங்க?" என்று கேட்டாராம். இதை கேட்ட நிருபருர் ஆத்திரம் அடைந்தாரோ இல்லையோ, கண்டிப்பாக அதிர்ச்சி அடைந்திருப்பார்.
'பாடகசாலை' என்றப் படத்தில் பத்து புதுமுகங்களில் ஒருவராக ஸ்ருதி என்றப் பெயரில் அறிமுகமான இவர், அப்போது அனைவரையும் அழைத்து அழைத்து பேட்டி கொடுத்தார். தற்போது இனியா என்ற பெயரில் கொஞ்சம் பிரபலமானதும், பேட்டி கொடுப்பதற்கெல்லாம் இப்படி பீஸ் கேட்க ஆரம்பித்திருப்பது அந்த நிருபருக்கு மட்டும் அல்ல அனைத்து நிருபருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதுதான்.
Comments
Post a Comment