Wednesday,12th of September 2012சென்னை::காதல் கிசு கிசு பற்றி கவலையில்லாமல் பார்ட்டிகளில் கைகோர்த்து சுற்றுகிறது த்ரிஷா, ராணா ஜோடி. ராணாவும் த்ரிஷாவும் நீண்ட நாள் நண்பர்கள். இது காதலாக மலர்ந்ததாக கிசு கிசு எழுந்துள்ளது. இதனை த்ரிஷா மறுத்து வருவதுடன் இருவரும் நட்பாக பழகுவதாக கூறி வருகிறார். ஆனால் ராணா காதல் கிசு கிசுவை மறுக்கவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் புத்தாண்டு பார்ட்டி கொண்டாட பல நடிகைகள் கோவா சென்றனர். ஜோடி போட்டு சென்றது த்ரிஷா,ராணாதான். சென்னை, ஐதராபாத்தில் நடந்த பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர். இதனால் காதல் கிசு கிசு வலுத்தது. சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கேற்ப தற்போது நடித்துவரும் 3 படங்கள் தவிர புதிய படம் எதையும் த்ரிஷா ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத் தில் ஐதராபாத்தில் இருவருக்கும் நெருக்கமான நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் ஜோடியாக கலந்துகொண்டனர். காதல் கிசுகிசு அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. பார்ட்டியில் முழுநேரமும் இருவரும் நெருக்கமாகவே ஜோடி போட்டு அமர்ந்திருந்தனர். அங்கிருந்த நிருபர் ஒருவர், உங்கள் இருவருக்கும் காதல் என்று கிசுகிசு வருகிறதே என த்ரிஷாவிடம் கேட்டபோது, ‘நாங்கள் நண்பர்கள்தான்‘ என்ற பழைய பதிலையே அவர் ரிபீட் செய்தார். இதே கேள்வியை ராணாவிடம் கேட்டபோது அவர் சிரித்தபடி நழுவிவிட்டார்.
Comments
Post a Comment