நான் சில்க் ஸ்மிதா இல்லை : சனா கான்!!!

Monday,September 03, 2012
சென்னை::சில்க் ஸ்மிதா வேடத்தில்தான் நடிக்கிறேனே தவிர நான் சில்க் ஸ்மிதா அல்ல என்றார் சனா கான்.‘சிலம்பாட்டம்' படத்தில் நடித்தவர் சனா கான். இவர் மலையாளத்தில் உருவாகும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையான ‘கிளைமாக்ஸ்' படத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி அவர் கூறியதாவது: கூட்டத்தில் வந்து ஆடிவிட்டு போகும் நடிகை அல்ல சில்க் ஸ்மிதா. இந்திய சினிமா வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார். துணிச்சல் மிக்கவரான சில்க் வேடத்தில் நான் நடிப்பது எனது அதிர்ஷ்டம். அவருடன் என்னை ஒப்பிட்டு சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.

சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறேனே தவிர நான் சில்க் ஸ்மிதா அல்ல. அதனால் விமர்சகர்கள் இத்துடன் தங்கள் விமர்சனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறேன். 32 நாட்கள் தினமும் 13 மணி நேரம் ஷூட்டிங்கில் பங்கேற்றேன். ஒவ்வொரு காட்சியிலும் புத்துணர்வுடன், கவர்ச்சியாக இருப்பது என்பது கடினம். சில்க் வேடம் என்பதால் பல்வேறு ஹீரோக்களுடன் காதல் காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தமிழ், மலையாளத்தில் புதிய படங்களின் ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன். மும்பை பெண்ணாக இருந்தாலும் என்னை நடிகையாக அடையாளம் காட்டியது தென்னிந்திய படங்கள்தான். இவ்வாறு சனா கான் கூறினார்.

Comments