Friday,7th of September 2012சென்னை::ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நீ தானே என் பொன் வசந்தம்' திரைப்படம் ஆடியோ விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் முனோட்டமும் இணையதளங்களில் 3 நாட்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
'நீ தானே என் பொன் வசந்தம்'படம் முதல் முறையாக இளையராஜா,கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ளது. இதனால் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
படத்தின் பாடல்கள் கவனத்தை ஈர்த்து அனைவரின் பாராட்டுக்கும் ஆளாகியிருப்பதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மகிழ்ச்சியோடு கூறுகிறார்.படத்தின் முன்னோட்டம் இண்டெர்நெட்டில் 3 நாட்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உற்சாகமாக கூறுகிறார்.
படத்தின் ஆடியோ சிடி சோனி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. வெளியாவதற்கு முன்னரே ஒரு லட்சம் சிடிக்கள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாடல்களை இணையதளங்களில் டவுண்லோடு செய்யும் வழக்கம் இருக்கும் இந்த நிலையில் ஆடியோ சிடியை ரசிகர்கள் ஆர்வத்தோடு வாங்கி வருகின்றனர்.
செயற்கை ஒலிகள் இல்லாமல் லண்டன் ஆர்கெஸ்ட்ரா பங்களிப்போடு இயல்பான மெல்லிசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுத்துள்ளது என்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.
Comments
Post a Comment