Thursday,6th of September 2012சென்னை::சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி பரபரப்புக்கும், பந்தாவுக்கும் பஞ்சமில்லாதவர் சிம்பு (எஸ்.டி.ஆர்). அவருடைய லேட்டேஸ்ட் பரபரப்பு 'போடா போடி' திரைப்படம் தான். நீண்ட நாட்களாக சிம்பு எடுத்துகொண்டிருந்த இப்படத்தின் ஒரு பாடலை இன்று (செப்.6) வெளியிட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அனைத்துப் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியை விரைவில் நடத்த இருக்கிறார்கள்.
இன்று வெளியான அந்த ஒரு பாடல் "லவ் பண்லாமா? வேணாமா?..." என்று தொடங்குகிறது. ஏற்கனவே "லூசு பெண்ணே லூசு..." பெண்ணே என்று இளைஞர்களை புலம்ப வைத்த சிம்பு, இந்த பாடலின் மூலம் "லவ் பண்லாமா...? வேணாமா...?" என்று கேள்வி கேட்க வைத்திருக்கிறார். தரண்குமார் இசையில் உருவாகியுள்ள இப்படால் வெளியான சில மணி நேரத்திற்குள்ளே இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
நேமிசந்த் ஜபக், வி.இதேஷ் ஜபக் இணைந்து வழங்கும் இப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்புகள் லண்டனிலும், பாடல்களை ஹாங்காங்கில் உள்ள டிஸ்னிலேண்ட், மக்காவு, மும்பை மற்றும் சென்னையில் படமாக்கியிருக்கிறார்கள்.
சிம்புக்கு ஜோடியாக நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் ஷோபனா, மாஸ்டர் சமரத், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் டெல்ஃபோர்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை ஆண்டனி கவனிக்க, கலை இயக்குநராக கிரண் பணியாற்றியிருக்கிறார். வாலி, சிம்பு, நா.முத்துக்குமார் ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். நடனம்-கல்யாண், பிரேம், ரக்ஷித், ராபர்ட்.
மிகுந்த பொருட்ச்செலவில் உருவாகியுள்ள இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து படத்தையும் விரைவில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
Comments
Post a Comment