பிரிந்த ஜோடியின் வாரிசுகள் கூட்டணி!!!

Tuesday,18th of September 2012
சென்னை::கவுதம இயக்கம் பொன்வசந¢த படத்தை இழுத்துட்டே போறாராம்... டெக்னீஷியன்கள் கடுப்பாகி போயிருக்காங்களாம். யோசிக்கும்போது ஷூட்டிங்கை வைக்கிறாராம். ஸ்கிரிப்ட்ல இல்லாத புது சீன்களையெல்லாம் யோசிச்சி, படமாக்கிட்டு இருக்காராம்...

ஞானி இசையும் டைமண்ட் கவிஞரும் கீறியும் பாம்புமாக சீறிக்கிட்டு பிரிஞ்சிட்டது இண்டஸ்ட்ரிக்கே தெரிஞ்ச விஷயம். அவங்களோட பிரிவை வாரிசுங்க சரிகட்டிட்டாங்களாம். யுவன இசைகிட்ட போன்ல பேசன டைமண்ட் கவியின் வாரிசு அவரோட மனச டச் பண்ணிட்டாராம். என்னோட இசைல பாட்டு எழுதற வாய்ப்பு சீக்கிரமே தருவேனு ஞானி வாரிசு சொன்னாராம். அத கேட்டு டைமண்ட் வாரிசு பூரிச்சி போயிட்டாராம்...

களவாடின ஹீரோவோடு சில்லுனு படத்துல நடிக்கிற தீப நடிகை
இப்பத்தான் இன்னிங்ஸை ஆரம்பிச்சிருக்காராம்... ஆனா யார்கிட்ட எப்படி பேசணும். எப்படி போஸ் கொடுத்தா மீடியாவ அட்ராக்ட் பண்ணலாம், இண்டஸ்ட்ரில யார்கிட்ட நட்பை வளர்த்துக்கணும்கிற வித்தைய சரியா கத்து வச்சிருக்காராம்...

ஹீரோவாத்தான் நடிப்பேனு மைக் மோகன நடிகர் காத்திட்டிருந்து ஏமாந்தாராம்.. 2 வருஷத்துக்கு முன்ன சொந்தமா ஹாட் பழம்னு படம் தயாரிச்சி ஹீரோவா புரூப் பண்ண போட்ட திட்டம் பெயிலியர் ஆனது. மார்க்கெட் இல்லாட்டாலும் பீல்டுல டச் வெச்சிருந்தவருக்கு இப்ப வில்லனா நடிக்க சான்ஸ் வந்திருக்காம். இத வீணடிக்க விரும்பாம ஓகே சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...

விரல் நடிகரு மன்மத படத்தோட பார்ட் டூ எடுக்கிறதா தகவல் கசியுதாம்...ஆனா அந்த திட்டத்த இப்பத்திக்கு நிறைவேத்ற ஐடியா எதுவும் நடிகருக்கு இல்லையாம். Ôஇப்போ நடிக்கிற படத்தை முடிக்கவே நேரம் சரியா இருக்கு பார்ட் டூ படம் எடுக்கிற எண்ணம் இப்போ இல்ல. அதனால அதுபத்தி தகவல யாரும் பரப்பாதீங்கன்னு பாக்கிறவங்ககிட்டயெல்லாம் சொல்றாராம். ஆனா, அந்த பார்ட் டூ தகவலை பரப்பினதே நடிகர்தான்னு இண்டஸ்ரில பேசிக்கிறாங்களாம்...

Comments