Saturday,1st of September 2012சென்னை::ஷூட்டிங்கிற்கு செல்ல முடியாத அளவுக்கு உடல் நிலை பாதித்தது ஏன் என்றதுக்கு பதில் அளித்தார் சமந்தா. பாணா காத்தாடி, நான் ஈ படங்களில் நடித்திருப்பவர் சமந்தா. தோல் நோய் பாதிப்பால் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு ஓய்வில் இருந்தார். இதனால் ஷங்கர், வெங்கட் பிரபு படங்களில் நடிக்க முடியாமல் போனது. இது பற்றி அவர் கூறியதாவது: ஷூட்டிங்கிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு சுற்றுலா செல்ல இருந்தேன். அதற்குள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. தோலில் அரிப்பு ஏற்பட்டது என்றெல்லாம் என்னைப்பற்றி வதந்திகள் வந்ததை கண்டு வருத்தம் அடைந்தேன். தொற்று ஏற்பட்டதால் இப்படி ஆனது. தற்போது குணம் அடைந்துவிட்டேன். மீண்டும் நடிக்க வந்தபோது கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் என் பட இயக்குனர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். மணிரத்னம், ஷங்கர், வெங்கட்பிரபு படங்களில் நடிக்க முடியாமல் போனதுபற்றி கேட்கிறார்கள். அது கடந்துபோன விஷயம். அதுபற்றி தொடர்ந்து பேச விரும்பவில்லை. வரும் அக்டோபர் முதல் நான் நடித்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது. எனக்கு தமிழ் நன்றாக தெரியும். ‘நீ தானே என் பொன் வசந்தம்Õ படத்திற்கு டப்பிங் பேச கவுதம் மேனன் கூறினார். ஏற்றுக்கொண்டேன். புதிய படங்களின் ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன். இவ்வாறு சமந்தா கூறினார்.
Comments
Post a Comment