Sunday,9th of September 2012மும்பை::ஹீரோ சப்போர்ட் இல்லாமல் ஹீரோயினாக சினிமாவில் நீடிக்க முடியாது என்றார் பிபாஷா பாசு. பாலிவுட் ஹீரோயின் பிபாஷா பாசு மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியது: என் வாழ்க்கையில் போராட்டங்கள், வேதனைகள் இல்லை என்று சொன்னால் பொய் சொல்வதாகிவிடும். காதல் போராட்டம், தோல்வியால் பட்ட வேதனை மனதில் ரணமாக இருக்கிறது. டாக்டராக ஆசைப்பட்டேன். மாடல் அழகியானேன். பிறகு நடிகையானேன். எளிமையான வாழ்க்கையை விரும்பினேன். நான் காதலில் விழுந்தேன். ஒரே நாளில் இது நடந்ததல்ல. என்னை துரத்தி துரத்தி காதலித்தார் ஜான் ஆப்ரஹாம். அதை ஏற்றபிறகு 100 சதவீதம் என்னை பறிகொடுத்தேன். 9 வருட காதல், தோல்வியில் முடிந்தது. உலகையே வெறுத்து வாழ்ந்தேன். எனது நண்பரும், சகோதரருமான ராக்கி என்னை தேற்றினார். அவர் தந்த ஆறுதல் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. கடவுள்போல் ‘ராஸ் 3 படத்தில் மகேஷ்பட் எனக்கு வாய்ப்பளித்தார். இனிமேல் நடிப்பில்தான் என் கவனம் இருக்கும். என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறேன். இன்றைக்கு எனக்கிருக்கும் ஒரே நண்பர் சல்மான்கான்தான். காதல் தோல்வி அடைந்திருந்தாலும் காதலில் நம்பிக்கை இழக்கவில்லை. மீண்டும் எனக்கு காதல் ஏற்பட்டால் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன். ஆனால் தனிமையே இப்போதைக்கு விரும்புகிறேன். எனக்கு திறமை இருக்கிறது. ஆனால் எந்தவொரு ஹீரோயினும் ஹீரோ சப்போர்ட் இல்லாமல் சினிமாவில் நீடிக்க முடியாது. இவ்வாறு பிபாஷா பாசு கூறினார்.
Comments
Post a Comment