ரஜினியைப் பற்றி புத்தகம் எழுதுகிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா!!!

Saturday, 29th of September 2012
சென்னை::சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் மாபெரும் வெற்றிகளாக அமைந்தப் படங்களில் 'அண்ணாமலை', 'பாட்ஷா', 'வீரா' ஆகிய மூன்று படங்களும் முக்கியமான படங்களாகும். இந்த படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, இந்த மூன்று படங்களின் திரை ஆக்கத்தையும், ரஜினியைப் பற்றியும் புத்தகமாக எழுதியிருக்கிறார்.

பாட்ஷாவும் நானும்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்புத்தகத்தில் அனைத்து வித சுவாரசியமான சம்பவங்களும், முத்திரை வனசங்கள் உருவான விதம், இசைமெட்டுகள் உருவான விதம், இசைகோர்ப்புகளின் சூழல்களும், சண்டை காட்சிகளின் சூழ்நிலை விவாதங்களும் எளிய நடையில் இடம் பெற்றுள்ளன.

அது மட்டுமில்லாமல் ரஜினிகாந்தின் மறுபக்கம், ஒளிப்பதிவுக்கருவியின் செயல்பாடு நின்றவுடன் ரஜினிகாந்த் எப்படி இருப்பார்? அரிதாரம் பூசிக்கொண்டு இருக்கும் போது அவரது மனநிலை எப்படி இருககும் போன்றவற்றையும் இந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்தை பற்றி எழுதியிருக்கும் இந்த புத்தகம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வெளிவருகிறது.

Comments