சத்யராஜ் மகள் நடிகையானார்!!!

Thursday,27th of September 2012
சென்னை::நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா நடிகையானார். சத்யராஜ் மகன் சிபிராஜ் ஏற்கனவே நடிகராகி பல படங்களில் நடித்து வருகிறார். மகள் திவ்யா சினிமாவுக்கு வராமல் சமூகசேவை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தொழிலாளர் நல அமைப்பில் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார்.

திவ்யா முதல் முறையாக குழந்தை தொழிலாளர்கள் பற்றிய டாகுமென்டரி படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தை கொல்கத்தாவை சேர்ந்த சிர்ஷாய் என்பவர் இயக்கி உள்ளார்.

இந்த வேடத்தில் நடிக்க முதலில் கெங்கனாவை அணுகினார். இவர் வேறு படங்களில் பிசியாக இருப்பதால் திவ்யாவை நடிக்க வைத்துள்ளனர். படத்தை சிபிராஜ் பார்த்து திவ்யா நடிப்பை பாராட்டினாராம். 'கேன்ஸ்' படவிழாவுக்கும் இதனை அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

Comments