Monday,17th of September 2012சென்னை::நமீதாவுக்கு, தமிழில் மிக பிடித்தமான வார்த்தை, "மச்சான்ஸ் தான். எந்த விழாவுக்குப் போனாலும் முதலில் "ஹாய்... மச்சான்ஸ் என்று தான் ஆரம்பிப்பார். இதைக் கேட்டதும் ரசிகர்களிடத்திலிருந்து, விசில் பறக்கும். நமீதாவால் பிரபலமான அந்த வார்த்தைக்கு, மரியாதை கொடுத்துத் தான், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தன் புதிய படத்துக்கு, "மச்சான் என்கிற தலைப்பையே வைத்துள்ளார். இப்படி மச்சானுக்கு மவுசு கூடிக் கொண்டே போகும் நேரத்தில், திடீரென மச்சானை மறந்துவிட்டார் நமீதா. சமீபத்தில் ஒரு படவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்த நமீதா, மைக் முன்னால் வந்து நின்றதுமே, "மச்சான்ஸ் என்ற வார்த்தையை, உச்சரித்து, உற்சாகப் படுத்துவார் என, ஆவலோடு ரசிகர்கள் இருந்தனர். ஆனால், கடைசிவரை அந்த வார்த்தையை உச்சரிக்கவே இல்லை, நமீதா.
Comments
Post a Comment