Sunday,16th of September 2012சென்னை: நடிகர் தனுஷ் மனதை பறிகொடுத்துவிட்டார். ஏ.ஆர். ரஹ்மானின் பாடலைக் கேட்டுத் தான் தனது மனதை பறிகொடுத்துள்ளார்.
தனுஷ் தான் நடிக்கும் முதல் இந்தி படமான ராஜ்னாஹாவின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அவர் அனில் கபூரின் மகள் சோனம் கபூருடன் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் காசியில் நடக்கிறது.
இந்நிலையில் தனுஷ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
பரத் பாலாவின் மரியான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் அக்டோபரில் துவங்குகிறது. அந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைத்துள்ள பாடல்களைக் கேட்டு மனதை பறிகொடுத்துவிட்டேன். எனது இந்தி படத்தின் படப்பிடிப்பு 15 சதவீதம் முடிந்துவிட்டது. இது ஒரு புதுவித அனுபவமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நடிப்பது தவிர சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் ஆகியோரை வைத்து எதிர் நீச்சல் என்ற படத்தை அவர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர். ரஹ்மான் பாடலைக் கேட்டு மனதை பறிகொடுக்காதவர் ஏது?
Comments
Post a Comment