Wednesday,19th of September 2012சென்னை::நடிகர் சூர்யா நடித்த ஹிட்டான படம் சிங்கம். இதில் ஜோடியாக அனுஷ்கா நடித்தார். ஹரி இயக்கினார். இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘சிங்கம்-2’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் நாயகிகளாக அனுஷ்கா, ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஹன்சிகா ஏற்கனவே தனுசுடன் மாப்பிள்ளை, ஜெயம் ரவியுடன் எங்கேயும் எப்போதும், விஜய்யுடன் வேலாயுதம், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்துள்ளார். ஆனால் அனுஷ்கா ‘அருள்நிதி’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி ஹன்சிகாவை விட முன்னணியில் இருக்கிறார்.
விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். எனவே ‘சிங்கம்-2’ படத்தில் அனுஷ்காவை முதல் நாயகியாகவும், ஹன்சிகாவை இரண்டாவது நாயகியாகவும் வைத்துள்ளனர். இது ஹன்சிகாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அனுஷ்காவுடன் இரண்டாவது நாயகியாக நடிக்க விருப்பம் இல்லையாம், நெருக்கமானவர்களிடம் இதனை சொல்லி புலம்பி வருகிறார்.
Comments
Post a Comment