Wednesday,19th of September 2012சென்னை::ஆறு, வேல், சிங்கம் போன்ற கமர்ஷியல் சினிமாக்களால் தமிழகத்தின் இண்டு இடுக்கெல்லாம் ரசிகர்கள் கிடைத்ததாக சூர்யா முன்பு கூறினார். கௌதம், கே.வி.ஆனந்த் போன்றவர்களின் நாகரிக கமர்ஷியலில் நடித்தாலும் ஹரியின் அடித்து தூள் கிளப்பும் கர்ஷியல் படங்கள் சூர்யாவின் கேரியருக்கு ஆக்சிஜன். அதனால்தான் சிங்கம் 2-வில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
ஹரி, சூர்யா, அனுஷ்கா, விவேக், தேவி ஸ்ரீபிரசாத் என்று சிங்கத்தின் அதே அங்கங்கள்தான் இரண்டாவது பாகத்திலும். கூடுதலாக ஹன்சிகாவை இணைத்திருக்கிறார்கள். ஹரியின் தொப்புள் நடனம் உறுதி.
அருவா கதையாக இருந்தாலும் கூட்டுக் குடும்பம், கிராமத்து தென்னந்தோப்பு நடனம், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை போன்ற ஏதாவது ஒரு ஊரின் பின்னணியில் கதை என்று ஹரியின் அம்சங்கள் எல்லாப் படத்திலும் இருக்கும். சிங்கம் 2-வின் கதைக்களம் தூத்துக்குடி போலிருக்கிறது. செப்டம்பர் 26ஆம் தேதி படப்பிடிப்பை தூத்துக்குடியில் தொடங்குகிறார்.
Comments
Post a Comment