
Wednesday,5th,of,September 2012சென்னை::'தெய்வத்திருமகள்' படத்திற்குப் பிறகு இயக்குநர் விஜய், விக்ரம், யுடிவி கூட்டணியில் உருவாகியிருக்கும் இரண்டாவது படமான 'தாண்டவம்' செப்டம்பர் 28ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் 25வது படமான 'தாண்டவம்' படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இதில் ஒரு கதாபாத்திரத்தில் கண் தெரியாதவராக நடித்திருக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான பகுதில் லண்டனில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இப்படி பல வகையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியிருக்கிறது.
பார்வை இல்லையென்றாலும், ஒலி எழுப்பி அதன் மூலம் தமது அருகில் என்ன இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளும் திறமை கொண்ட டேணியல் கிஸ்ஸின், கதாபாத்திரத்தை மையமாக வைத்துதான் விக்ரமின் பார்வையற்ற கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அமெரிக்காவில் வாழும் டேணியல் கிஸ்ஸிடம் விக்ரம் சிறப்பு பயிற்சி பெற்றிருக்கிறார்.
இந்த திறன் பார்வையற்றவர்களுக்கு பெரிதும் உதவும் என்பதால் டேணியல் கிஸ்ஸை 'தாண்டவம்' படக்குழுவினர் சென்னைக்கு வரவைத்து இங்குள்ள பார்வையற்றவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக செப்டம்பர் 12ஆம் தேதி இந்தியாவுக்கு வரும் டேணியல் கிஸ், சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசப்போகிறார்.
விக்ரம், அனுஷ்கா, எமிஜாக்சன், கஜபதிபாபு, சரண்யா பொன்வன்னன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'தாண்டவம்' தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வரும் செப்டம்பர் 28ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
Comments
Post a Comment