Friday,31st of August 2012சென்னை::அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்தியுடன் டூயட் பாட இயக்குனர் செல்வராகவனிடம் அனுமதி கேட்டுள்ளார் நடிகை அனுஷ்கா.
நடிகை அனுஷ்கா செல்வராகவனின் இரண்டாம் உலகம் பட ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா பறந்துவிட்டார். இதற்கிடையே அவர் கதாநாயகியாக நடிக்கும் அகெஸ் பாண்டியன் படத்தில் நாயகி இல்லாமல் கார்த்தியால் டூயட் பாடமுடியவில்லை. இதையடுத்து அலெக்ஸ் பாண்டியன் படக்குழுவினர் அனுஷ்காவு்ககு போன் மேல் போன் போட்டதுடன் ஏராளமான இமெயில் அனுப்பி உடனே சென்னை வாருங்கள், நீங்கள் நடிக்க வேண்டிய பாகங்கள் ஷூட் செய்ய வேண்டியுள்ளது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓயாது போன் ஒலித்ததையடுத்து அனுஷ்கா செல்வராகவனிடம் சென்று விவரத்தைக் கூறி சென்னை செல்ல அனுமதி கேட்டுள்ளார். அவரும் அனுமதி அளிக்கவே அம்மணி சென்னைக்கு வந்தார். வந்த கையோடு கார்த்தியோடு டூயட் பாட சென்றுவிட்டார்.
அலெக்ஸ் பாண்டியன் தெலுங்கில் 'பேட் பாய்' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி மற்றும் அனுஷ்காவுக்கு ஆந்திராவில் ரசிகர்கள் அதிகம் என்பதால் படம் அங்கும் நிச்சயம் ஹிட்டாகும் என்று நம்பப்படுகிறது.
Comments
Post a Comment