Tuesday,28th of August 2012சென்னை::மிஷ்கின் இயக்கும் ‘முகமூடிÕ படத்தில் வில்லனாக நடிக்கும் நரேன் மலையாள படத்தில் வி.கே.பிரசாத் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
புதுமுகங்கள் நடித்த ‘அட்டகத்திÕ படத்தை இயக்கிய ரஞ்சித், டைரக்டர் வெங்கட் பிரபுவின் உதவியாளர். இப்படத்தின் பட்ஜெட் ரூ.2.5 கோடி. அதே அளவு தொகை பப்ளிசிட்டிக்கும் செலவிடப்பட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
டிஷ்யும்Õ படத்தில் நடித்த குள்ள நடிகர் பக்ரு, மலையாளத்தில் ‘குட்டியும் கோலும்Õ என்ற படத்தை இயக்குகிறார்.
மனைவி ஷாலினி பேட்மின்டன் விளையாடுவதற்காக தனது பங்களாவில் உள்ள தோட்டத்திலேயே விளையாட்டு மைதானம் அமைத்து பரிசாக கொடுத்திருக்கிறார் அஜீத்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையில் கார்த்தி,அனுஷ்கா நடிக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன் படத்தின் பாடல் சிடி செப்டம்பரில் வெளியாக உள்ளது.
பிரபு தேவா இயக்கும் இந்தி படத்தில் ஸ்ருதி ஹாசன் அண்ணனாக நடிக்கிறார் வில்லன் நடிகர் சோனு சூட்.
‘அம்மாவின் கைபேசி படத்துக்காக வரிகளே இடம்பெறாமல் ரோஹித் குல்கர்னியின் இசையை வைத்தே பாடல் காட்சியை போன்று படமாக்க உள்ளாராம் தங்கர்பச்சான்.
‘சந்திரா பட ஷூட்டிங்கிற்காக நியூயார்க் செல்லும் ஸ்ரேயா அங்கிருந்து டொரன்டோ சென்று திரைப்பட விழாவில் பங்கேற்கிறார். பிறகு ஜப்பான் சென்று ‘சிவாஜி 3டி படம் பார்க்க உள்ளார்.
அழகு கிரீம்களை தடவினால் வெள்ளை ஆகலாம் என்று சொல்வது உண்மையென்றால் காலம் காலமாக அதை பயன்படுத்தும் மக்களின் முகம் இந்நேரம் வெள்ளை அடித்ததுபோல் மாறியிருக்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி மாறவில்லை என டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் குஷ்பு.
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மாதவனின் 7வயது மகன், கிப்டுக்கு பதிலாக தனது நண்பர்களிடம் நன்கொடை வசூலித்து விலங்குகள் சிகிச்சைக்கான நிதியாக அதை அளித்தான்.
Comments
Post a Comment