'நீர்க்குமிழி' படம் ரீமேக்: நாகேஷ் வேடத்தில் விவேக்!!!

Tuesday,28th of August 2012
சென்னை::நாகேஷ் கதாநாயகனாக நடித்து 1965-ல் ரிலீசான படம் ‘நீர்க்குமிழி’. பாலச்சந்தர் இயக்கினார். இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, பாடல் பிரபலமானது.

‘நீர்க்குமிழி‘ படம் தற்போது மீண்டும் ரீமேக் ஆகிறது. நாகேஷ் வேடத்தில் விவேக் நடிக்கிறார். செல்வா இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெமினி கணேசனின் ‘நான் அவனில்லை‘ படத்தை ரீமேக் செய்தவர்.

இதுகுறித்து இயக்குனர் செல்வா கூறும்போது:-

இன்றைய இளம் ரசிகர்கள் முக்கியமான பழைய படங்கள் பற்றி அறிந்து கொள்ளவதற்காகவே ரீமேக் செய்கிறேன். அவர்களுக்கு ரீமேக் படங்கள் புதிய அனுபவத்தை கொடுக்கும். நாகேஷ் நடித்த பாலச்சந்திரின் ‘நீர்க்குமிழி’ படத்தை ரீமேக் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். நாயகனாக விவேக் நடிப்பார். இதன் உரிமையை பெற ஏற்பாடு நடக்கிறது என்றார்.

Comments