Friday, 13th of July 2012சென்னை::தினமும் பட வாய்ப்புகள் வருகிறது. எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ள முடியுமா என கேட்கிறார் ஹன்சிகா மோத்வானி. அவர் கூறியதாவது: அந்த படத்தில் ஏன் நடிக்கவில்லை, இந்த படத்தில் நடிக்க மறுத்தீர்களாமே என நிறைய பேர் கேட்கிறார்கள். எனக்கு தினமும் பட வாய்ப்புகள் வருகிறது. எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஏற்கனவே கைவசம் நிறைய படங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் முடிக்க வேண்டும். சூர்யாவுடன் சிங்கம் 2, சிம்புவுடன் வேட்டை மன்னன், வாலு, ஆர்யாவுடன் சேட்டை படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் விஷ்ணுவுடன் நடித்து வருகிறேன். நடிகை ஜெயப்பிரதா தயாரிக்கும் படத்தில் நடிக்க மறுத்ததாக தகவல் வந்தது. அதில் உண்மை இல்லை. தனது உறவினரை ஹீரோவாக ஜெயப்பிரதா அறிமுகப்படுத்துகிறார். அந்த படத்தில் என்னை நடிக்க கேட்டார். அது தெலுங்கு படத்தின் ரீமேக். முதலில் அந்த தெலுங்கு படத்தை பார்ப்பேன். அதன்பிறகு நடிப்பதாக இருந்தால், கால்ஷீட் ஒதுக்குவேன். அதற்குள் அந்த படத்துடன் என்னை தொடர்புபடுத்தி நிறைய செய்திகள் வந்துவிட்டன. இது வருத்த மளிக்கிறது.
Comments
Post a Comment