Monday, 2nd of July 2012சென்னை::தமிழ் படத்தில் நீச்சல் உடை யில் நடிக்க மறுத்தார் ஹன்சிகா மோத்வானி.
இது பற்றி அவர் கூறியதாவது:
‘விஷால் நடிக்கும் படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனதா?Õ என்கிறார்கள். இது வதந்தி. எனக்கு என்ன தகுதியோ அந்த சம்பளம்தான் பெறுகிறேன். ஸ்கிரிப்ட்தான் எனக்கு முக்கியம். அதன்பிறகுதான் சம்பளம் மற்ற விஷயங்கள். என்னிடம் ஸ்கிரிப்ட் சொல்லும்போது அதை முழுமையாக கேட்கிறேன். பிடித்தால் நடிக்கிறேன். இல்லாவிட்டால் ஏற்பதில்லை. நான் வெளிப்படையான குணம் கொண்டவள். எதையும் பெரிதாகத்தான் கற்பனை செய்வேன். சிறிதாக எதையும் நினைக்க மாட்டேன். கடைசியில் கடின உழைப்புதான் எனது குறிக்கோளாக இருக்கும். ‘சிம்புவின் Ôவேட்டை மன்னன்Õ படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகைகள் நடிக்கிறார்களே அதில் நடிப்பது ஏன்?Õ என்கிறார்கள். நான் எப்போதுமே பாதுகாப்பான இடத்தையே விரும்புகிறேன். இதில் நிறைய ஹீரோயின்கள் நடித்தாலும் எனது வேடம் முக்கியமானதாக அமைந்துள்ளது. அதில் என்னை தக்க வைத்துக்கொள்ள முடியும். எனவேதான் நடிக்கிறேன். ‘இந்தி 'டெல்லி பெல்லி' ரீமேக்கான 'சேட்டை' படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறீர்களா?' என்கிறார்கள். நீச்சல் உடையில் நடிக்கும்படி என்னிடம் இயக்குனர் கூறினார். அதற்கு நான் இன்னும் மனதளவில் தயாராகவில்லை. எனவே நடிக்க மறுத்துவிட்டேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
Comments
Post a Comment