Tuesday, 3rd of July 2012சென்னை::திரிஷா, லட்சுமிராய் இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டி அளித்தும் உள்ளனர். மங்காத்தா படப்பிடிப்பில்தான் இருவருக்கும் பனிப்போர் வெடித்தது. அப்படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர்.
லட்சுமிராய் அதில் நடித்தது பற்றி கூறும்போது, நான்தான் மங்காத்தா படத்துக்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். எனக்கு பிறகுதான் திரிஷாவை தேர்வு செய்தனர். படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு இரண்டு கேரக்டர்களில் எதில் வேண்டுமனாலும் நீங்கள் நடித்துக் கொள்ளலாம் என்றார். நான் விட்டுக் கொடுத்த கேரக்டரில்தான் திரிஷா நடித்தார் என்றார்.
இதற்கு திரிஷா பதில் அளிக்கம்போது, லட்சுமிராய் பேட்டி சில்லித்தனமானது என்றார். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட கேரக்டரில் நடித்தோம் என்றும் கூறினார்.பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவே இல்லை.
திரிஷா பங்கேற்கும் விழாக்களை லட்சுமிராய் புறக்கணித்தார். திரிஷாவும் லட்சுமிராய் விழாக்களுக்கு செல்வது இல்லை. ஆனால் தற்போது இந்த தகராறுக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. இருவரும் சந்தித்து மனம்விட்டு பேசி சமரசமாகியுள்ளனர்.
சமீபத்தில் துபாய் படவிழாவுக்கு சென்றபோது அங்குள்ள நட்சத்திர ஓட்டல் விருந்தில் இந்த சமரச சந்திப்பு நடந்துள்ளது. அப்போது இருவருக்கும் நெருக்கமான நடிகர்-நடிகைகள் உடன் இருந்தனர். இருவரும் பழைய கசப்பான சம்பவங்களை மறந்து தோழிகளாக இருப்பது என்று கைகளை பற்றிக் கொண்டு நட்புணர்வை பரிமாறிக் கொண்டனர்.
Comments
Post a Comment