Wednesday,4th of July 2012சென்னை::அழகின் மீது பாலாவுக்கு அப்படியென்ன கோபமோ. நடிகனோ, நடிகையோ தோலை கறுக்க வைத்து, முகத்தில் சாயம் அடித்து ஒருவழி பண்ணிவிடுவார். வேதிகாவும் இந்த ட்ரீட்மெண்டில் சிக்கியிருக்கிறார்.
வெள்ளை வெளேர் வேதிகா பாலாவின் புதிய படத்தில் அதர்வாவுடன் நடித்து வருகிறார். ஆஹா ஓஹோ என்று பாலாவை புகழ்ந்தாலும் அடிநாதமாக ஒரு வேதனை வேதிகாவின் மனதில் இருக்கிறது. சக்கரக்கட்டி வரை பல படங்களில் நடித்திருந்தாலும் வேதிகாவுக்கு என்று தமிழில் ஒரு இடம் இன்னும் உருவாகவில்லை. பாலாவின் படம் அப்படியொரு இடத்தை தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. இடம் கிடைக்கும், வாய்ப்பு கிடைக்குமா?
காரணம் வேதிகாவின் தோலை கறுக்க வைத்தது மட்டுமின்றி அவரது முகத்திலும் விளையாடியிருக்கிறார் பாலா. ஒரு ஸ்கேரி லுக் என்று வேதிகாவே வௌவே வைக்கும் அளவுக்கு பயங்கர தோற்றமாம். இதைப் பார்த்து எந்த ஹீரோ தன்னை கமிட் செய்வார் என்ற கலக்கம் வேதிகாவிடம் ரொம்பவே இருக்கிறது.
ஏன் பாலா இப்படி?
Comments
Post a Comment