‌ஜீவா, த்‌ரிஷா படம் தொடங்கியது!!!

Monday, 2nd of July 2012
சென்னை::ஜீவா, த்‌ரிஷா முதல்முறை இணைந்து நடிக்கும் என்றென்றும் புன்னகை படத்தின் பூஜை சென்னையில் எளிமையான முறையில் நடந்தது.

முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களுக்குப் பிறகு ‌ஜீவா ஒப்புக் கொண்ட படம் என்றென்றும் புன்னகை. வாமனன் படத்தை இயக்கிய அகமது இந்தப் படத்தை இயக்குகிறார். ஹீரோயின் த்‌ரிஷா. இதன் பூஜை சென்னையில் நடந்தது. த்‌ரிஷா, ‌ஜீவா, ஆர்.பி.சௌத்‌ரி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இ‌ன்று தொடங்கும் படப்பிடிப்பில் த்‌ரிஷா கலந்து கொள்கிறார். இவருக்கும் ‌‌ஜீவாவுக்குமான காம்பினேஷன் காட்சிகள் ஆகஸ்டில் படமாகும் என தெ‌ரிகிறது. முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களை முடிக்க வேண்டியிருப்பதால் இந்த தாமதம்.

வினய் ராய், சந்தானம், நாசர், லிசா ஹைடன் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.

Comments