Friday, 13th of July 2012சென்னை::யுகே-யில் சகுனிக்கு இது மூன்றாவது வாரம். வார இறுதியில் இப்படம் நான்கு திரையிடல்களில் 2,141 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுகே வசூல் 87,368 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 75.59 லட்சங்கள். சகுனிக்கு இந்த வசூல் ரொம்ப அதிகம்.
யுஎஸ்-ஸில் சகுனி மூன்றாவது வார இறுதியில் 352 டாலர்களை ஒரு திரையிடலில் வசூலித்துள்ளது. இதுவரை அதன் யுஎஸ் வசூல் 1,11,118 அமெரிக்கன் டாலர்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 61.91 லட்சங்கள்.
சென்ற வாரம் வெளியான நான் ஈ யுஎஸ்-ஸில் முதல் மூன்று தினங்களில் 6.48 லட்சங்களை வசூலித்துள்ளது. அதேநேரம் இதன் தெலுங்குப் பதிப்பான ஈகா முதல் மூன்று தினங்களில் 3 கோடிக்கும் அதிகம் வசூலித்து சாதனைப்படைத்திருக்கிறது. இந்திப் படம் போல் பச்சானின் வசூலைவிட ஈகாவின் வசூல் அதிகம்.
இதோபோல் திரையிட்ட அனைத்து வெளிநாடுகளிலும் ஈகா பட்டையை கிளப்புகிறது.
Comments
Post a Comment