Wednesday,4th of July 2012சென்னை::சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் தொலைக்காட்சி உரிமை ஆளுங்கட்சிக்கு சொந்தமான ஜெயா டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர்களான ஈராஸ் மற்றும் மீடியா ஒன் குளோபல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ரஜினி, தீபிகா, சரத்குமார் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள 3டி படமான கோச்சடையான் உரிமையை வாங்க பெரிய தொலைக்காட்சிகள் அனைத்தும் ஆர்வம் காட்டின.
ஆனால் இந்த உரிமையை இம்முறை வாங்கியிருப்பது... ஜெயா தொலைக்காட்சி.
தமிழ் சினிமா மட்டுமல்ல.. இந்திய சினிமாவில் எந்தப் படத்துக்கும் தராத அளவுக்கு பெரும் விலையை இந்தப் படத்துக்கு தந்துள்ளது ஜெயா தொலைக்காட்சி.
இந்தி மற்றும் தெலுங்கு ஒளிபரப்பு உரிமைக்கு ஜீ, சோனி மற்றும் ஜெமினி தொலைக்காட்சிகள் மோதி வருகின்றன.
12.12.12-ல் படம் ரிலீஸ்
படத்தை சூப்பர் ஸ்டார் ரஜியின் பிறந்த நாளான 12.12.12-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
Comments
Post a Comment