Wednesday,13th of June 2012சென்னை::அழகர்சாமியின் குதிரை படத்திற்காக தேசிய விருது வாங்கிய அப்புக்குட்டியின் அடுத்த படத்தில் ஜோடியாக சேர்ந்திருப்பவர் ராட்டினம் பட நாயகியாம். இது கோலிவுட்டில் சக நடிகர்களிடையே பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.
அழகர்சாமியின் குதிரை படத்தில் அழகு சரண்யா மோகன்தான் இவருக்கு ஜோடி. அந்த எரிச்சலே அகலாமல் இன்னும் பர்னாலை தேய்த்துக் கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு அடுத்த எரிச்சலை கொடுத்திருக்கிறார் அப்புக்குட்டி. இவர் புதிதாக நடித்துக் கொண்டிருக்கும் மன்னாரு படத்தில் இவருக்கு ஜோடியாக சமீபத்தில் வந்த ராட்டினம் பட நாயகி ஸ்வாதி நடிக்கிறார். மற்ற நடிகர்களுக்கு பொறாமை ஏற்பட இது ஒன்று போதாதா?
கன்னங்கரேல் எண்ணை சட்டியில்தான் வெள்ளை வெளேர் ஆப்பத்தையும் ஊத்துறாங்க. யதார்த்தம் இதுதான்னாலும் அந்த சட்டிக்கு கிடைச்ச யோகம் கூட நமக்கு கிடைக்கலையே என்று சக நடிகர்களை புலம்ப வைத்திருக்கிறார் அப்புக்குட்டி.
அழகர்சாமியின் குதிரை படத்தில் சரண்யா மோகனை போட்டத்திற்கோ ரசிகர்களிடையே வரவேற்பு இல்லை. மன்னாரு படத்தில் அப்புக்குட்டி - ஸ்வாதி ஜோடியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
Comments
Post a Comment