Wednesday,13th of June 2012சென்னை::விரைவில் கோவையில் குடியேறப் போகிறார் ரஜினி என்ற செய்தி, கோவை ரசிகர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி சமீபத்தில் அவரது குடும்ப நிகழ்வுகள் காரணமாக அமைதியின்றி தவிப்பதாகவும், இமய மலைக்கு ஓய்வெடுக்கச் செல்வதாகவும் பல்வேறு செய்திகள் வந்த வண்ணமிருந்தன.
இதற்கிடையே, அவர் கோவையில் குடியேறப் போவதாக குமுதம் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மகள்கள் பிரச்சினையால் மன நிம்மதி இழந்த ரஜினி, கோவை ஆனைகட்டியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமம் அருகே, அமைதியான சூழலில் ஒரு இடம் பார்த்து தேர்வு செய்த ரஜினி, அங்கே ஒரு சிறிய அழகான பங்களாவை உருவாக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் கடந்த ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த பங்களா, கிடுகிடுவென கட்டி முடிக்கப்பட்டு, இப்போது முடியும் தறுவாயில் உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினி சில காலம் அமைதியாக இங்கே தங்கியிருக்க விரும்புவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வீடு குறித்து எந்த தகவலையும் வெளிப்படுத்தாவிட்டாலும், அந்தப் பகுதி மக்கள் இதை ரஜினி வீடு என்றே அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தி வெளியானதிலிருந்து கோவை ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துவிட்டதோடு, தலைவர் வீட்டைப் பார்த்துவிட்டு வர ஆனைகட்டிக்கு போக ஆரம்பித்துவிட்டார்களாம்.
Comments
Post a Comment