Monday, 11th of June 2012சென்னை::மோகன்லால் படத்தில் நடிக்க மறுத்தார் த்ரிஷா. மலையாளத்தில் ஐந்து இயக்குனர்கள் சேர்ந்து ஒரு படத்தை இயக்க உள்ளனர். ஆக்ஷன் படமான இதில் 5 பிரபல ஹீரோக்கள் நடிக்கின்றனர். மோகன்லால் நடிக்கும் காட்சிகளை ஜோஷி படமாக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்க எண்ணினார் இயக்குனர். ஆனால் த்ரிஷா மறுத்துவிட்டார். இதுபற்றி த்ரிஷா தரப்பில் கூறுகையில், ‘‘த்ரிஷாவுக்கு மலையாள படத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனால் பிறமொழிப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். எனவே மோகன்லால் படத்துக்கு கால்ஷீட் தர முடியவில்லை.
தற்போது தமிழில் 4 படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இப்போதைக்கு மலையாள படத்தில் நடிக்க அவருக்கு நேரமில்லை’’ என்றனர். ஆனால் பட குழுவினர் வேறு காரணம் சொல்கின்றனர். ‘‘த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்டபோது அவர் கேட்ட சம்பளம் அதிகம். சுமார் 40 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார். அதை குறைக்க மறுக்கிறார். மலையாள பட உலகம் சிறிய வர்த்தகம் கொண்டது. எனவே இவ்வளவு பெரிய தொகையை ஹீரோயினுக்கு தர இயலாது’’ என்கின்றனர்.
Comments
Post a Comment