Saturday, 30th of June 2012சென்னை::மணிரத்னம் படம் மூலம் என் தங்கை நடிகையாக அறிமுகமாவதால் எனக்கு கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருக்கிறது என்றார் கார்த்திகா.
இதுபற்றி ‘கோÕ கார்த்திகா கூறியதாவது:
என் தங்கை துளசி 10ம் வகுப்பு படிக்கிறார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘கடல்Õ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படம், இந்த வருடத்துக்கான சிறந்த நடிகை பட்டத் தை அவருக்கு பெற்றுத்தரும். இதேபோல் 10வகுப்பு தேர்விலும் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகையின் கனவு. அந்த வாய்ப்பு தேடி வரும்போது யார்தான் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்? அதுவும் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். தற்போது சென்னையில் இருக்கும் துளசி நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார். ஏற்கனவே நடனம், நாடகம், நடிப்பில் பயிற்சி பெற்றிருந்தாலும் வசன உச்சரிப்பில் பயிற்சி அவசியம் தேவைப்பட்டது. மணிரத்னம், சுஹாசினி இருவரும் தங்கள் மகள்போல் துளசியை கவனித்துக்கொள்கிறார்கள். எனவே படம் வெற்றி பெறுமா, இல்லையா? என்பது பற்றியும், துளசியைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. அதேநேரம், பெரிய படத்தில் நடிப்பதால் அவள் எப்படி நடிப்பாளோ என எனக்கு நடுக்கமாக உள்ளது. நான் நடிக்க வரும்போது எந்த பயிற்சி யும் பெறவில்லை. எனது அம்மாவும் நடிப்பு பற்றி அப்போது சொல்லித்தரவில்லை. என்னுடைய இயற்கையான பாவனைகளுடன் இருக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். அதில் வெற்றி பெற்றேன். அதேவெற்றி துளசிக்கும் அமைய வேண்டும்.
Comments
Post a Comment