Wednesday,20th of June 2012சென்னை::தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட திடீர் நிபந்தனை விதித்தார் கரீனா கபூர். ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் ஹீரோயின்கள் தமிழ் படத்தில் நடித்துள்ளனர். கரீனா கபூரை நடிக்க வைக்க நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. தற்போது இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கி நடிக்கும் ‘இசை படத்தில் கரீனாவை குத்துப்பாடலுக்கு ஆட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் மும்பை சென்ற சூர்யா இப்படத்தின் கதையை கரீனாவிடம் விளக்கினார். குத்து பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடும்படி அவரிடம் கேட்டார்.
இதற்காக ரூ 1 கோடி சம்பளம் தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதைக்கேட்ட கரீனா, ‘ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அந்த பாடலை எனக்கு முதலில் போட்டுக்காட்ட வேண்டும். அது பிடித்திருந்தால்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தார். இதையடுத்து பாடலை ஒலிப்பதிவு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இப்பாடல் கரீனாவை நிச்சயம் கவரும். அவர் இதில் நடிப்பது உறுதி என்றார் சூர்யா.
Comments
Post a Comment