Thursday,21st of June 2012சென்னை::சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் ஆபாசம் இருக் காது என்றார் சனா கான். இந்தியில் வெளியான சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் வித்யாபாலன் சில்க் ஸ்மிதா வேடம் ஏற்றதுபோல் மலையாளத்தில் உருவாகும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் சில்க் வேடம் ஏற்கிறார் சனா கான். இவர் சிலம்பாட்டம் படத்தில் நடித்தவர். இதுபற்றி சனா கான் கூறியதாவது: என்னைப்பற்றி சிலர் வதந்தி பரப்புகிறார்கள். இதனால் மன வேதனை அடைந்தேன். அதுபற்றி என் அம்மாவிடம் கூறவில்லை. என் மீது சுமத்தப்படும் தவறான வதந்திகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. இனிமேலாவது அதுபோன்று யாரும் செய்ய வேண்டாம். வரும் காலங்களில் எல்லாம் நல்லவையாகவே நடக்கும் என்று நம்புகிறேன்.
மலையாளத்தில் ‘கிளைமாக்ஸ்’ என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பதுபற்றி கேட்கிறார்கள். அவரைப் பற்றி தெரிந்தவர்கள் இப்படத்தின் ஸ்கிரிப்ட் எழுதுவதால் நிறைய உண்மைகள் இருக்கும். மலையாள படவுலகுக்குள் நுழைய இதைவிட நல்ல கதை எனக்கு கிடைக்காது. இது ஆபாசத்தை வெளிப்படுத்தும் கதையாக இருக்காது. அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், சினிமாவில் சாதித்த விஷயங்கள் இருக்கும். இன்னும் சொல்வதென்றால் சிறியவர்களும் இப்படத்தை பார்க்கும் வகையில் தணிக்கையில் யு சான்றிதழ் பெறும் வகையிலேயே காட்சிகள் அமைக்கப்படுகிறது. இவ்வாறு சனா கான் கூறினார்.
Comments
Post a Comment