Sunday, 17th of June 2012சென்னை::சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் காதல் ஆரம்பமானது, இருவரும் ஜோடி சேர்ந்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்திலிருந்துதான்.
இந்தப் படத்தில் நடிக்க ஒத்திகை பார்க்க, இருவரும் அமெரிக்காவில் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். கணவன் - மனைவியாக நடிக்க ஒத்திகை பார்த்தனர்.
அப்போதுதான் இருவருக்கும் காதல் பூத்தது. இரண்டு ஆண்டுகளுக்குமேல் காதலித்து, கடந்த மாதம் தம்பதிகளாகினர்.
திருமணமாகிவிட்டாலும் அவர்களால் ஹனிமூனை உடனடியாகக் கொண்டாட முடியவில்லை.
தான் நடிக்க வேண்டிய பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் சினேகா. ஒருவழியாக இரவு பகல் பார்க்காமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, இப்போதுதான் இல்லற வேலைகளை ஆரம்பித்துள்ளனர் புதுமணத் தம்பதிகள்.
தேனிலவுக்காக எங்கே போகலாம் என்ற குழப்பமே இருவருக்கும் இல்லையாம். காரணம், தங்கள் காதல் ஆரம்பித்த அமெரிக்காவுக்கே செல்ல முடிவெடுத்திருந்தார்களாம்.
தங்கள் முடிவை இரு தினங்களுக்கு முன் அமைதியாக செயல்படுத்தினர் சினேகாவும் பிரசன்னாவும்.
இருவரும் நேற்று முன்தினம் ஹனிமூனுக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்!
Comments
Post a Comment