Friday, 15th of June 2012சென்னை::'டெல்லி பெல்லி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'சேட்டை' எதிர்ப்பார்த்தை விட வேகமாக வளர்ந்து வருவதால் அதிக உற்சாகத்தில் இருக்கிறது யு.டிவி நிறுவனம்.
விஷ்ணுவர்தன் படத்தில் தற்போது நடித்து வரும் ஆர்யா, அப்படத்தினை முடிந்தவுடன் செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்தினை முடித்து விட்டு 'சேட்டை' படத்தில் முழுக்கவனம் செலுத்த இருக்கிறார்.
ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா ஆகியோர் நடித்து வரும் 'சேட்டை' படத்தினை கண்ணன் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார்.
ஆர்யாவிற்கு 'சேட்டை' படத்தில் இரண்டு சூடான காட்சிகள் இருக்கிறது. அஞ்சலி, ஹன்சிகா இருவருடன் நெருக்கமாக இருக்க கூடிய காட்சிகளாம் அது.
ஆர்யா - அஞ்சலி இருவருக்கும் ஒரு முத்தக் காட்சி இருக்கிறது. அக்காட்சியை மும்பையில் எடுக்க இருக்கிறார்கள். ஆர்யா - ஹன்சிகா இருவருக்கும் ஒரு படுக்கையறை காட்சி இருக்கிறது.
'கொசுறு' கபாலி : " ஆர்யா கூட ஒரு ஹீரோயின்னாலே சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது.. இதுல ரெண்டு வேறயா.. பட்டாசு கொளுத்த போறாய்ங்க
Comments
Post a Comment