Saturday, 30th of June 2012சென்னை::எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்த ஷரவானந்த், சாய்குமார் சேர்ந்து நடித்துள்ள தெலுங்கு படம் ‘பிரஸ்தானம்'. இதில் ரூபி பரிகார் ஹீரோயின். தமிழில் ‘பதவி' என்ற பெயரில் மொழிமாற்றம் ஆகிறது. இது பற்றி இயக்குனர் தேவா.கே. கூறியதாவது:
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைதான் உலகில் கொடியது என்பார்கள். அதைவிட கொடுமையானது பதவி ஆசை. இந்த ஆசையால் குடும்ப உறவுகளும், நட்பும்கூட வலுவிழந்துவிடும். இதை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. டோலிவுட்டில் இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழில் ரீமேக் செய்ய கேட்டனர். ஆனால் ஒரிஜினல் ஸ்கிரிப்ட்டில் உள்ள சாராம்சம் சிதையக்கூடாது என்பதால் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. விஜய் நடித்த 'போக்கிரி' உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய வி.பிரபாகர் வசனம் எழுதுகிறார். சம்பத் ஒளிப்பதிவு. மகேஷ் சங்கர் இசை. லாரன்ஸ் பிரசாத் தயாரிப்பு
Comments
Post a Comment