Sunday 3rd of June 2012நடிகை நயன்தாரா தியானம், யோகா என்று ஆன்மீகவாதியாகியுள்ளார்.
கிறிஸ்தவரான நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக இந்து மதத்தை தழுவினார். அதில் இருந்து அவர் திருப்பதி ஏழுமலையான் கோவில், குருவாயூர் பகவதி அம்மன் கோவில் என்று பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறார். நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்து வருகிறார்.
தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் அவர் சீதையாக நடித்தபோது கூட மாமிசம் சாப்பிடாமல் விரதம் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தியானம், யோகா என்று ஆன்மீகவாதியாக மாறியுள்ளார். ஷூட்டிங்கில் நேரம் கிடைத்தாலும் கூட கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பி்ததுவிடுகிறாராம்.
நயன்தாரா முன்பெல்லாம் கோபம் வந்தால் கையில் கிடைப்பதை தூக்கி எறிவார். ஆனால் தற்போது கோபம் வந்தால் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறாராம்.
யோகா, தியானம் மூலம் தனது கோபத்தை கட்டுப்படுத்தி வருகிறார் போலும். தான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். மேலும் தான் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது அவர் முகத்தில் விரக்தியோ, கவலையோ இல்லை மாறாக சாந்தம் குடி கொண்டுள்ளது.
Comments
Post a Comment