Saturday, 23rd of June 2012சென்னை::கிளாமர் காட்டாவிட்டால் ரசிகர்கள் ஏற்பார்களா? என கேட்கிறார் டாப்ஸி. ‘ஆடுகளம், ‘வந்தான் வென்றான் படங்களில் நடித்தவர் டாப்ஸி. அவர் கூறியதாவது: இந்த ஆண்டு எனக்கு இதுவரை ‘தருவுÕ என்ற ஒரு தெலுங்கு படம் மட்டும்தான் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஆனாலும் ஓய்வில்லாமல் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறேன். இதன் பிறகு வரிசையாக 5 படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் ‘சஷ்மே பத்தூர்Õ இந்தி படம் ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நடித்துள்ள ‘மறந்தேன் மன்னித்தேன்Õ பட ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதில் கிளாமர் காட்டாமல் நடித்திருக்கிறேன். இதை ரசிகர்கள் ஏற்பார்களா? அவர்கள் இதை எப்படி ஏற்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதற்கிடையில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் Ôமதகஜ ராஜாÕ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். இதன் ஷூட்டிங் காரைக்குடியில் தொடங்கியது. தொடர்ந்து பொள்ளாச்சியில் நடக்க¤றது. இது அச்சு அசல் சுந்தர்.சி முத்திரையுடன் கூடிய படமாக இருக்கும். என்னுடைய சொந்த குணாதசியங்களை உள்ளடக்கிய கேரக்டராக இது அமைந்திருக்கிறது. நேரடி தமிழ் பட ஷூட்டிங்கில் நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு கலந்துகொள்கிறேன். இதனால் கொஞ்சம் நடுக்கமாக உள்ளது. பட குழுவில் உள்ள அனைவருக்கும் தமிழ் நன்றாக தெரியும். தமிழ் தெரியாத ஒரே ஆள் நான்தான். விரைவில் தமிழ் கற்றுக்கொள்வேன். சுந்தர் சி., விஷால், வரலட்சுமி என செட்டில் இருப்பவர்கள் ஜோக் ¢அடித்து பேசும்போது அதை புரிந்துகொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.
Comments
Post a Comment