Wednesday,13th of June 2012சென்னை::சமுத்திரக் கனி - ஜெயம் ரவி இணையும் புதிய படத்துக்கு வெவ்வேறு பெயர்களை மீடியா சூட்டிவந்தது. ஆனால் அவையெல்லாம் இல்லை என்று நிரூபணமாகிவிட்டது.
இந்தப் படத்துக்கு நிமிர்ந்து நில் என்று பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமலா பால் ஜோடி
இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலா பால் ஒப்பந்தம் ஆகியுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்டில் தொடங்குகிறது. இப்போது நடித்துக் கொண்டிருக்கும் பூலோகம் படத்தை முடித்த கையோடு, நிமிர்ந்து நில் படத்துக்கு வருகிறார் ரவி. அதே போல புனித் ராஜ்குமாரை வைத்து கன்னடத்தில் தனது போராளியை இயக்கிக் கொண்டிருக்கும் சமுத்திரக் கனி, விரைவில் அந்தப் படத்தை முடித்துவிட்டு நிமிர்ந்து நில்லை ஆரம்பிக்கிறார்.
ஆக்ஷன் படங்களில் இது ஒரு புதிய முயற்சி என்கிறார் சமுத்திரக் கனி.
Comments
Post a Comment