Tuesday, 26th of June 2012சென்னை::உலகிலேயே அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் மாடல்களில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி கிஷேல் புன்ட்சென் (Gisele bundchen) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பிரபல பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ் உலகிலேயே அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் பெண் விளம்பர மாடல்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இதில் ஆண்டிற்கு 45 மில்லியன் அமெரிக்கன் டாலர்களை சம்பாதிக்கும் கிஷேல் புன்ட்சென் முதலிடத்தில் உள்ளார். இவர் பிரேசிலின் மாடல் தேவதை என்று அழைக்கப்படுகிறார்.
அதேபோல் இங்கிலாந்து நாட்டின் கனவுக்கன்னி கேட் மோஸ் ஆண்டிற்கு 9.2 மில்லியன் டாலர் சம்பாதிப்பதால் அவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். ரஷ்ய நாட்டின் நட்டாலியா ஒடியன்னவா ஆண்டிற்கு 8.6 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதிப்பதால் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
நிஜமாகவே இவர்கள் கோடிகளில் புரளும் தேவதைகள்தான் !
Comments
Post a Comment