Saturday, 9th of June 2012விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் துப்பாக்கி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கலைப்புலி தாணு தயாரிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பில் விஜய்க்கு திடீரென காயம் ஏற்பட்டது.
சண்டை காட்சியில் அவர் நடித்த போது கால்மூட்டில் அடிபட்டது. வலியால் துடித்தார். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது விஜய் லண்டனில் இருக்கிறார். அங்கு அவர் கால்மூட்டில் அடிபட்டதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
விஜய் மெல்போர்னில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க முடிவு செய்து இருந்தார். காலில் அடிபட்டதால் அவ் விழாவுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது.
துப்பாக்கி படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்று சமீபத்தில் சென்னை நகரமெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகள் கண்டித்தன. அது போன்ற சிகரெட் பிடிக்கும் சீன்கள் படத்தில் இல்லை என்று தயாரிப்பு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
Comments
Post a Comment