Saturday, 9th of June 2012சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் பெயர் மிகவும் ராசியாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை தமிழ் சினிமா நடிகைகளிடம் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக புதுமுக நடிகைகளிடம் இந்த நம்பிக்கை அதிகமாகவே நிலவி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
அவள் பெயர் தமிழரசி' படத்தில் அறிமுகமான மனோ சித்ரா, அந்த பெயரில் ராசி இல்லாமல் நந்தகி என மாற்றினார். அதுவும் கை கொடுக்கவில்லை. எனவே இரண்டாவது தடவையாக மனுமிகா என பெயரை மாற்றியுள்ளார்.
எண் கணித ஜோதிடர் தேர்வு செய்த பெயராம். பெயர் மாறிய ராசியில் விமல் ஜோடியாக 'கூத்து' படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.
இதுபோல் ஹனிரோஸ் தனது பெயரை சவுந்தர்யா என மாற்றினார். அதில் ராசி இல்லாமல்
இரண்டாவது தடவையாக துவானி என மாற்றி இருக்கிறார்.
Comments
Post a Comment