என் படம் கமர்ஷியல்தான்... ரீமேக்தான்... அதுக்கென்ன இப்போ! - பிரபு தேவா காட்டம்!!!

Thursday, June 07, 2012
பொதுவாகவே இந்திப் பட உலகில் தென்னிந்திய மொழி இயக்குநர்களின் படங்களை உடனே ஒப்புக் கொள்வதில்லை. படம் நன்றாக ஓடினாலும் கூட விமர்சனம் என்ற பெயரில் நக்கலடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

மணிரத்னம், ப்ரியதர்ஷன் உள்ளிட்டோருக்கும் இதே நிலைதான். முருகதாஸ் தப்பித்துவிட்டார்.

இப்போது பிரபுதேவா முறை. அவர் இயக்கியுள்ள இரண்டாவது இந்திப் படம் ரவுடி ரத்தோர் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது.

ஆனால் இன்னொரு பக்கம் இந்தப் படம் குறித்து தாறுமாறான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர் இந்தி மீடியாவில்.

இது இயக்குநர் பிரபு தேவாவைக் கடுப்பேற்றியுள்ளது. இந்த விமர்சனங்கள் குறித்து அவர் கூறுகையில், "ரவுடி ரத்தோர்' இல்லாத படம் என விமர்சிக்கின்றனர். படம் சூப்பர் ஹிட், மக்கள் பாராட்டுகின்றனர். வசூலிலும் சாதனை படைக்கிறது. ஒரு வெற்றிப் படத்துக்கு வேறு என்ன வேண்டும்.

விமர்சனங்களுக்கு நான் மரியாதை கொடுக்கிறேன். ஆனால் விமர்சனங்களை எதிர்பார்த்து நான் படங்கள் எடுக்கவில்லை. ரசிகர்களுக்காகத்தான் படம் எடுக்கிறேன். தென் இந்திய மொழிகளில் தயாரான படங்களை ரீமேக் செய்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நான் எடுப்பவை வியாபாரப் படங்களைத்தான். அதுவும் ரீமேக்தான். அதுக்கென்ன இப்போ....

அதற்காக நான் பெருமைபடுகிறேன். ரவுடி ரத்தோர் படத்தை தெலுங்கில் இருந்து ரீமேக் செய்துள்ளேன். வாண்டட்டும் ரீமேக் படம்தான். எல்லா படங்களும் வெற்றி பெற்றுள்ளன. இனியும் இதைத் தொடர்வேன். விமர்சகர்களால் என் படம் ஓடுவதில்லை," என்றார்.

Comments