Saturday, 23rd of June 2012சென்னை::அமீர் தன் அடுத்த படமான ஆதி பகவனை எப்போது வெளியில் தரிசனம் காட்டுவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.
இப்போது அதற்கு விடைகிடைத்திருக்கிறது. ஒரு படம் குறித்து செய்திகள் லேசு பாசாக வெளி வர ஆரம்பித்துவிட்டாலே, படத்தை வெளியில் விட ஆயத்தமாகிறார்கள் என்று அர்த்தம்.
இப்போது ஆதிபகவன் செய்திகள் மீடியாவில் இடம்பெற ஆரம்பித்துள்ளன.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி - நீத்து சந்திரா ஜோடியாக நடிக்கின்றனர்.
ஜெயம் ரவி முதன் முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அதில் ஒருவேடம் திருநங்கை கேரக்டராம்.
ஆரம்ப காலப் படங்களில் விளையாட்டுப் பிள்ளை அல்லது பணக்கார இளைஞனாக நடித்து வந்த ஜெயம்ரவி 'பேராண்மை' படத்தில் ஆக்ஷன் வேடத்தில் நடித்தார். 'ஆதிபகவன்' படத்தில் நடிப்பில் தனது இன்னொரு பரிமாணத்தை காட்டப் போகிறார் என்கிறார்கள்!
பார்க்கக் காத்திருக்கிறோம்.!!
Comments
Post a Comment