Sunday, 17th of June 2012சென்னை::முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு நடிக்க தயார் என்றார் கமல்ஹாசன். இது குறித்து அவர் கூறியதாவது: எந்தவொரு படத்தில் நடிக்கும்போதும் அதற்காக எனது முழு உழைப்பையும் செலவழிக்கிறேன். ஒவ்வொரு படத்தையும் தாயன்புடன் அணுகுகிறேன். நான் ஏற்கும் கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப என்னை உருமாற்றிக்கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை. இன்னும் எந்த பாத்திரத்துக்காகவும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒருவேளை அந்த தேவை ஏற்பட்டால் அதையும் செய்துகொள்ள தயங்க மாட்டேன். இப்போதைக்கு என் படங்களை நானே எழுதி இயக்குகிறேன். ‘மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்து நாயகன் போன்ற படம் எப்போது தருவீர்கள்? என்கிறார்கள்.
மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றுவேனா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இருவரும் சந்திக்கும்போது இணைந்து பணியாற்றுவது பற்றி பேசிக்கொள்வோம். ரஜினியுடன் இணைந்து மீண்டும் நடிப்பீர்களா? என்கிறார்கள். இருவரும் இணைந்தால் அந்த படத்துக்கு விலை நிர்ணயிப்பது என்பது வானத்தை எட்டிவிடும். இருவருக்கும் சம்பளம் நிர்ணயிப்பதற்கு ஒரு லிமிட் இருக்கிறது. சம்பளம் கொடுத்த பிறகு அந்த படத்தை தயாரிப்பதற்கான பட்ஜெட்டை பார்க்கும்போது அது போதுமானதாக இருக்காது.
Comments
Post a Comment