நாட்டுப்புற இசையே எனக்கு தெரியாது : ஜி.வி.பிரகாஷ்!!!

Saturday, June, 02, 2012
மேற்கத்திய இசையை கேட்டு வளர்ந்த எனக்கு, கிராமத்து நாட்டுப்புற இசையே தெரியாது என்றார் ஜி.வி.பிரகாஷ். ‘வெயில்' படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். அவர் கூறியதாவது: சென்னையில் பிறந்து வளர்ந்தேன். ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றினேன். பிறந்தது முதல் மேற்கத்திய இசையைத்தான் கேட்டுக் கொண்டிருந்தேன். ‘வெயில்' படத்தில் ‘வெயிலோடு விளையாடி.. என்ற பாடல் கிராமத்து பின்னணியிலான பாடலாக அமைந்தது. இந்த பாடல் தவிர பல்வேறு பாடல்களை ஃபோக் பாணியில் இதுவரை அமைத்து விட்டேன்.

இதெல்லாம் முறைப்படி நான் போக் இசை கற்றுக்கொண்டு அமைத்தது கிடையாது. அந்த பாணியை புரிந்துகொண்டு காட்சிக்கு ஏற்ப இயக்குனரின் எண்ணத்தை புரிந்துகொண்டு இசை அமைத்தது. செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்Õ படத்துக்கு உலக அளவிலான இசை பாணியை பின்பற்றினேன். ‘மயக்கம் என்னÕ உள்ளிட்ட பல படங்களில் மாறுபட்ட பாணிகளை பின்பற்றினேன்.

முதன்முறையாக கமர்ஷியல் ரீதியிலாக இசை அமைத்திருக்கும் படம் கார்த்தி நடித்துள்ள ‘சகுனி'. 5 பாடல்களுக்கு இசை அமைத்துள்ளேன். கந்தா காரவடை முருக்கு மசால்வடை என கிராமப்புறங்களில் பாடும் பாடல் ஒன்றும் இதில் இடம்பெறுகிறது. இது பட இயக்குனர் சங்கர் தயாளின் தந்தை அவருக்கு பாடிக்காட்டிய பாடல். அடுத்து இயக்குனர் பாலாவின் படத்துக்கு இசை அமைக்கிறேன். அது வித்தியாசமான அனுபவம்.
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

Comments