Sunday, 17th of June 2012சென்னை::சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவின் திருமண நிகழ்ச்சியில் நடிகைகள் ஸ்ரேயாவும், தமன்னாவும் நடனம் ஆடினர். திருமண நிகழ்ச்சிகளில் பிரபல நட்சத்திரங்கள் நடனம் ஆடுவது பாலிவுட் ஸ்டைல். ஒரு பாடலுக்கு ஆட ஷாருக்கான் ஒரு கோடிவரை வாங்கியிருக்கிறார்.
ஸ்ரேயாவும், தமன்னாவும் அப்படிதான் லம்பாக பணம் வாங்கி நடனம் ஆடினர் என்று ஹைதராபாத் முழுக்க பேச்சு. இதனை தமன்னா மறுத்திருக்கிறார்.
ராம் சரண் எனக்கு பேமிலி ப்ரெண்ட் மாதிரி. அவரின் திருமணத்துக்கு ப்ரெண்ட்லியாகதான் ஆடினேனே தவிர காசு எதுவும் வாங்கவில்லை என்றார் தமன்னா. காசு வாங்காமல் ஆடுகிற அளவுக்கு அவரிடம் என்ன கடன்பட்டிருக்கிறாரோ தமன்னா.
Comments
Post a Comment