Friday, 22nd of June 2012சென்னை::பிரபு தேவாவைத் திருமணம் செய்து கொள்வதற்காக புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமலிருந்த நயன்தாரா, கடைசியாக ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சீதாவாக நடித்தார்.
அந்த வேடம் அவருக்கு புதிய அந்தஸ்தைக் கொடுத்தது என்று கூட சொல்லலாம்.
எதிர்ப்பார்த்தபடி பிரபு தேவாவுடன் நயன்தாராவின் திருமணம் நடக்காமல் போனது. இருவரும் இப்போது பிரிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.
காதல் முறிந்துவிட்டதால், மீண்டும் முழுவீச்சில் நடிக்க வந்துவிட்டார் நயன்தாரா. தமிழில் 3 படங்களும், தெலுங்கில் 4 படங்களும் அவர் கையில் உள்ளன. இப்போதும் அவர்தான் நம்பர் ஒன்.
இந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தத. சில்க் ஸ்மிதா வேடம். கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் என்று சொல்லி, சம்பளமாக ரூ 2 கோடியை ஒரே செக்காக தந்தார்களாம், படத்தின் தயாரிப்பாளர்கள்.
ஆனால் நயன்தாரா அந்த வேடத்தில் நடிக்க முடியாது என ஒரேயடியாகச் சொல்லிவிட்டாராம்.
காரணம்?
சீதாவாக நடித்து நல்ல இமேஜைப் பெற்றுள்ள தன்னால், ஐட்டம் நடிகை பாத்திரத்தில் நடித்து அந்த இமேஜக் கெடுத்துக் கொள்ள முடியாது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன், என செக்கை திருப்பிக் கொடுத்துவிட்டாராம் நயன்.
Comments
Post a Comment